/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆதார் மையங்களில் 'சர்வர்' வேகமில்லை; கைரேகை புதுப்பிப்பதில் காலதாமதம் ஆதார் மையங்களில் 'சர்வர்' வேகமில்லை; கைரேகை புதுப்பிப்பதில் காலதாமதம்
ஆதார் மையங்களில் 'சர்வர்' வேகமில்லை; கைரேகை புதுப்பிப்பதில் காலதாமதம்
ஆதார் மையங்களில் 'சர்வர்' வேகமில்லை; கைரேகை புதுப்பிப்பதில் காலதாமதம்
ஆதார் மையங்களில் 'சர்வர்' வேகமில்லை; கைரேகை புதுப்பிப்பதில் காலதாமதம்
ADDED : ஜூலை 10, 2024 01:45 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், ஆதார் மையங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில், 'சர்வர்' வேகம் குறைவு காரணமாக, மாணவர்கள் கைரேகை புதுப்பிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பல்வேறு உதவித் தொகை பெறுவதற்கு ஏதுவாக மாணவ, மாணவியரின் ஆதார் ஆவணத்தில் கைரேகை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, வங்கி கணக்கு எண்ணுடன் 'சீலிங்' செய்யப்படுகிறது. இதனால், அங்கீகரிப்பட்ட ஆதார் பதிவு மையங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சென்று வருகின்றனர்.
ஆனால், தினமும், 20 டோக்கன் மட்டுமே வழங்கப்படுவதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அடுத்தடுத்த நாள், பெற்றோர்செல்ல வேண்டியிருப்பதால், அவர்களின் பணியும் பாதிக்கிறது.
இதுகுறித்து, பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
ஆதார் பதிவு மையம் மற்றும் தபால் அலுவலகங்களில், சர்வர் வேகம் குறைவு காரணமாக, 30க்கும் குறைவாகவே டோக்கன் வழங்கப்படுகிறது. ஆதார் பதிவு மையத்தில், காலை, 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பணிகள் நடந்தாலும், ஒவ்வொரு மாணவருக்கும் 20 நிமிடங்கள் வரை ஆகிறது.
இதனால், ஏராளமான மாணவ, மாணவியர் சீருடையுடன் தங்களது பெற்றோருடன் சென்று, கைரேகை புதுப்பிக்க நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். தலைமை தபால் நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், ஆதார் சேவை மையங்களில் 'சர்வர்' வேகத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
இதேபோல, பெற்றோர் மற்றும் மாணவர்களை அலைகழிக்காமல் வங்கி மற்றும் தபால் ஊழியர்கள் நடந்து கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி, ஆதார் சேவை பணிகளை வேகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.