/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆபத்தை உணராமல் 'செல்பி'; சுற்றுலா பயணியர் அத்துமீறல் ஆபத்தை உணராமல் 'செல்பி'; சுற்றுலா பயணியர் அத்துமீறல்
ஆபத்தை உணராமல் 'செல்பி'; சுற்றுலா பயணியர் அத்துமீறல்
ஆபத்தை உணராமல் 'செல்பி'; சுற்றுலா பயணியர் அத்துமீறல்
ஆபத்தை உணராமல் 'செல்பி'; சுற்றுலா பயணியர் அத்துமீறல்
ADDED : ஜூலை 10, 2024 10:20 PM

வால்பாறை : வால்பாறையில் பருவமழை பெய்யும் நிலையில், லேசான குளிருடன், இதமான சீதோஷ்ண நிலையும், அடிக்கடி பனிமூட்டமும் நிலவுகிறது.
சீதோஷ்ண நிலை மாற்றதால் வால்பாறையில் தேயிலை செடிகளும் பசுமைக்கு திரும்பியுள்ளன. வால்பாறையின் இயற்கை அழகை ரசிக்க, சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர்.
வார இறுதி நாட்களில், இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் மலைப்பாதையில் ஆபத்தை உணராமல் அதிவேகமாக வாகனத்தை இயக்குகின்றனர். இளைஞர்கள் சிலர் ரோட்டில் ஆபத்தை உணராமல் 'செல்பி' எடுக்கின்றனர். இளைஞர்களின் செல்பி மோகத்தால விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'வால்பாறையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், இருசக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணியர் மெதுவாக வாகனங்களை இயக்க வேண்டும். ரோட்டில் வாகனத்தை நிறுத்தி, 'செல்பி' எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
சுற்றுலா பயணியர் அத்துமீறும் போது, கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் வனத்துறையினர் எச்சரிக்கை செய்து அனுப்புகிறோம். சுற்றுலா வருவோரும், ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என்றனர்.