/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாவட்ட கூடைப்பந்து அணி வீரர் - வீராங்கனைகள் தேர்வு மாவட்ட கூடைப்பந்து அணி வீரர் - வீராங்கனைகள் தேர்வு
மாவட்ட கூடைப்பந்து அணி வீரர் - வீராங்கனைகள் தேர்வு
மாவட்ட கூடைப்பந்து அணி வீரர் - வீராங்கனைகள் தேர்வு
மாவட்ட கூடைப்பந்து அணி வீரர் - வீராங்கனைகள் தேர்வு
ADDED : ஜூலை 18, 2024 12:12 AM

கோவை : கோவை மாவட்ட கூடைப்பந்து அணிக்காக, வீரர் - வீராங்கனையினர் தேர்வு நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாவட்ட கூடைப்பந்து கழக மைதானத்தில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், மாநில அளவில் 16வயதுக்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
அதில் பங்கேற்கும் கோவை மாவட்ட, 16 வயதுக்கு உட்பட்ட அணிக்கான தேர்வு, கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், நேற்று நடந்தது. மாணவ - மாணவியருக்கு தனிப்பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதன் மாணவர் பிரிவில் 170 பேர், மாணவியர் பிரிவில் 80 பேர் பங்கேற்றனர்.
தேர்வில், சிறப்பாக செயல்பட்ட 15 மாணவர்கள், 15 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு, தயார் செய்யப்படுகின்றனர்.
மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, மாநில போட்டியில் பங்கேற்க அனுப்பப்படுவர் என, மாவட்ட கூடைப்பந்து சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.