/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விதைச்சான்று நடைமுறை தொழில்நுட்ப பயிற்சி விதைச்சான்று நடைமுறை தொழில்நுட்ப பயிற்சி
விதைச்சான்று நடைமுறை தொழில்நுட்ப பயிற்சி
விதைச்சான்று நடைமுறை தொழில்நுட்ப பயிற்சி
விதைச்சான்று நடைமுறை தொழில்நுட்ப பயிற்சி
ADDED : ஜூன் 23, 2024 04:16 PM
பொள்ளாச்சி:
கோவை மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உரிமைச்சான்றளிப்பு துறையின் வாயிலாக உதவி விதை அலுவலர்களுக்கு விதைச்சான்று நடைமுறைகள் குறித்து தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் மாரிமுத்து தலைமை வகித்தார்.
விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) சதாசிவம், சான்று விதைகளின் முக்கியத்துவம், விதைப்பற்றிக்கை தயாரித்தல், விதைப்பண்ணை பதிவு செய்தல் ஆகிய தொழில்நுட்பம் குறித்து விளக்கினார்.
பொள்ளாச்சி விதைச்சான்று அலுவலர் நந்தினி, விதை சுத்தி பணிகள், சான்றளிப்பு பணிகள் குறித்தும், பதிவேடு பராமரிப்பு மற்றும் சுத்தி பணியின் போது கவனிக்க வேண்டியவை குறித்து விளக்கினார். கோவை மாவட்டத்தை சேர்ந்த விதைச்சான்று அலுவலர் பிரியதர்ஷினி, செல்லம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.