/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி தீவிரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி தீவிரம்
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி தீவிரம்
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி தீவிரம்
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 21, 2024 01:15 AM
பாலக்காடு,:பாலக்காடு அருகே, ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை தீயணைப்பு துறையினர் தேடுகின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் ஆலம்கடவு பகுதியைச் சேர்ந்தவர் ஷிபின், 16. இவர், ஆலத்தூரில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், தரூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற அவர், அங்குள்ள நண்பர்கள் இருவருடன் மீன் பிடிப்பதற்காக காயத்ரி ஆற்றுக்கு சென்றார்.
ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், ஆற்றில் இறங்கிய ஷிபின், நீரில் அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த, ஆலத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஒருங்கிணைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் தேடியும், வாலிபரை கண்டுபிடிக்க முடியவில்லை. தகவல் அறிந்து, ஆலத்தூர் எம்.பி., ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியை பார்வையிட்டு வேகப்படுத்தினார்.