/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 23, 2024 11:16 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நீட், யுஜி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், திருவள்ளுவர் திடலில் நடந்தது.
கூட்டமைப்பு நிர்வாகி வடிவேல்குமார் வரவேற்றார். நிர்வாகிகள் அருளானந்தம், முத்துக்குமாரசாமி, குமரகுருபன், மூர்த்தி, முகமது காஜாமுகைதீன், தங்கபாசு உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், நீட், யுஜி தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில், 2024 - 25ம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையை, தமிழக அரசின் பிளஸ்2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என, மத்திய, மாநில அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.