/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாய்பாபா காலனியில் சாய காத்திருக்கிறது புளியமரம் :பாதுகாப்பாக அப்புறப்படுத்தினால் ஆபத்து இல்லை சாய்பாபா காலனியில் சாய காத்திருக்கிறது புளியமரம் :பாதுகாப்பாக அப்புறப்படுத்தினால் ஆபத்து இல்லை
சாய்பாபா காலனியில் சாய காத்திருக்கிறது புளியமரம் :பாதுகாப்பாக அப்புறப்படுத்தினால் ஆபத்து இல்லை
சாய்பாபா காலனியில் சாய காத்திருக்கிறது புளியமரம் :பாதுகாப்பாக அப்புறப்படுத்தினால் ஆபத்து இல்லை
சாய்பாபா காலனியில் சாய காத்திருக்கிறது புளியமரம் :பாதுகாப்பாக அப்புறப்படுத்தினால் ஆபத்து இல்லை

விழும் நிலையில் புளியமரம்
சாய்பாபாகாலனி, கே.கே.புதுார், சிவக்குமார் வீதியில், புளிய மரத்தின் அடிப்பகுதியில் கரையான் அரித்து, சாய்ந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள மரத்தால், ஆபத்து காத்திருக்கிறது. மரத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.
இருளால் பாதுகாப்பில்லை
பீளமேடு, முல்லை நகரின், மூன்று கம்பங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் பெண்கள் மற்றும் முதியவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து
நவாவூர் பிரிவு, அருணாச்சலம் நகர் ரோட்டில், பாதாள சாக்கடை பணிகளுக்காக குழி தோண்டப்பட்டது. நான்கு மாதங்களுக்கு மேலாகியும், குழியை சரிவர மூடவில்லை. சாலையின் பாதி துாரம் வரை மண் குவியலாக கிடக்கிறது. சாக்கடை நீர் தேங்கி கடும் துர்நாற்றம், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. குழியில் குழந்தைகள் விழுவதற்கு வாய்ப்புள்ளது.
அடிக்கடி விபத்து
விளாங்குறிச்சி ரோடு, அறிவொளி நகரில், சாலையில் ஆங்காங்கே ஆழமான குழிகள் உள்ளன. சாலை நடுவே உள்ள குழிகளால், இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்கின்றனர். சேதமடைந்த சாலையால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
பாம்பு, தேள் படையெடுப்பு
ரேஸ்கோர்ஸ், ஜி.டி.ரோடு, சுப்பு அபார்ட்மென்ட் அருகே தெரு முழுவதும், கடந்த ஆறு மாதங்களாக குப்பை தேங்கிக்கிடக்கிறது. குடியிருப்பு பகுதியில் பல இடங்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளால், பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் வீட்டிற்குள் வருகின்றன.
கடும் துர்நாற்றம்
கணபதி, 19வது வார்டு, இரண்டாவது வீதி, எம்கே.பி., காலனியில், சாக்கடை கால்வாய் பல இடங்களில் இடிந்துள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதி முழுவதும், கடும் துர்நாற்றம் வீசுகிறது. சீரான இடைவெளியில் சாக்கடை கால்வாயும் சுத்தம் செய்வதில்லை.
நாய் தொல்லை
தொண்டாமுத்துார், ராமசாமி நகரில் தெருக்களில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றுகின்றன. இரவில் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன. குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர்.
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு
ஒண்டிப்புதுார், படக்கே கவுண்டர் வீதி, விரிவாக்கம் பகுதியில், கருமாரி அம்மன் லே-அவுட் பின்புறம், பொதுப்பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், மாற்றுப்பாதை மிகவும் குறுகலாக உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
உடைந்த சிலேப்
பீளமேடு புதுார், பொதுக்கழிவறை முன்புறம் சாலை நடுவே சிலேப் உடைந்து, குழியாக உள்ளது. இதனால், நடந்து செல்பவர்கள், பைக்கில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். தினமும் இப்பகுதியில் விபத்து நடப்பதால், உடைந்த சிலேப்பை உடனடியாக மாற்ற வேண்டும்.
நடைபாதை சேதம்
போத்தனுார், சர்ச் ரோட்டில், இரண்டு பக்க நடைபாதையும் சேதமடைந்துள்ளது. கற்கள் பெயர்ந்து குழிகளாக இருப்பதால், நடந்து செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். சேதமடைந்த நடைபாதையை சீரமைத்து தர வேண்டும்.