/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பறவைகளை காக்க தண்ணீர் வையுங்க! விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்கள் பறவைகளை காக்க தண்ணீர் வையுங்க! விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்கள்
பறவைகளை காக்க தண்ணீர் வையுங்க! விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்கள்
பறவைகளை காக்க தண்ணீர் வையுங்க! விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்கள்
பறவைகளை காக்க தண்ணீர் வையுங்க! விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்கள்
ADDED : மார் 11, 2025 09:53 PM

பொள்ளாச்சி, ;'வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பறவைகளின் தாகம் தீர்க்க குவளைகளில் தண்ணீர் வைக்க வேண்டும்,' என, அரசுப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. அறிவியல் ஆசிரியர் கீதா, மாணவர்களுக்கு, பறவைகள், விலங்குகள், சிட்டுக்குருவிகள் என அனைத்துக்கும் தண்ணீர் வைக்க அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கினார்.
சிட்டுக்குருவி தின கவிதை, பாடல், ஓவியம் மாணவர்கள் வரைந்தனர். பொது இடங்களில் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆசிரியர் கூறியதாவது:
வெயிலின் தாக்கம் தாங்க முடியல; கொஞ்சம் தண்ணீர் கொடுங்க, என, கேட்காதவர்களே இருக்க முடியாது. நமக்கெல்லாம் தண்ணீர் தர சொந்தங்கள், நண்பர்கள் என பலர் உள்ளனர்.
ஆனால், எண்ணற்ற காகம், குருவி, கிளி போன்ற பறவைகள் இந்த கோடையின் வெப்பம் தாங்காமல், தண்ணீரை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றன. தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காத சூழலில் பறவைகள் இறந்துவிடும். அவற்றின் தாகத்தை தீர்க்க நாமும் உதவ வேண்டும்.
கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளில் உயிர்ச்சூழல் கெடாத வகையில் துார்வாரி நீர் நிலையை மேம்படுத்த வேண்டும்.
வீட்டின் கூரை மீது, மொட்டை மாடியின் மீதும் சிறு குவளைகளை நிழலான இடத்தில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகம் தீர்த்து அவற்றை காக்க வேண்டும்.
இந்த பணியை இந்த நொடியே செய்வோம். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல; அனைத்து வகை உயிரினங்களுக்குமானது.
இவ்வாறு, அவர் கூறினார்.