/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழில்முனைவோரை கைதுாக்கி விட திட்ட அறிக்கைகளுக்கு ரூ.45 கோடி மானியம் தொழில்முனைவோரை கைதுாக்கி விட திட்ட அறிக்கைகளுக்கு ரூ.45 கோடி மானியம்
தொழில்முனைவோரை கைதுாக்கி விட திட்ட அறிக்கைகளுக்கு ரூ.45 கோடி மானியம்
தொழில்முனைவோரை கைதுாக்கி விட திட்ட அறிக்கைகளுக்கு ரூ.45 கோடி மானியம்
தொழில்முனைவோரை கைதுாக்கி விட திட்ட அறிக்கைகளுக்கு ரூ.45 கோடி மானியம்
ADDED : ஜூன் 20, 2024 04:46 AM
கோவை, : கோவை மாவட்ட தொழில் மையம் மூலமாக, தொழில் முனைவோர் சமர்ப்பித்த திட்ட அறிக்கைகளுக்கு, 45.09 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் புதிய தொழில்முனைவோருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்படுகிறது. முதல் தலைமுறை தொழில்முனைவோரின் தொழில் முயற்சிக்கு கை கொடுக்கவும், ஊக்கமளிக்கவும் 'நீட்ஸ்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உற்பத்தி மற்றும் சேவை தொழில் நிறுவனங்களுக்கு, ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான திட்டத்தொகையில், 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக, 75 லட்சம் ரூபாய் வரை மானியம் தரப்படுகிறது.
இத்திட்டத்தில் கோவை மாவட்டத்தில், ரூ.49.63 கோடிக்கு, 38 திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்கு, ரூ.11.95 கோடி மானியம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல், வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தில், 9 கோடி ரூபாய் கேட்டு, 177 திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதற்கு, 2 கோடியே, 24 லட்சத்து, 73 ஆயிரம் ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், ரூ.59.66 கோடிக்கு, 475 திட்ட அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 16 கோடியே, 14 லட்சத்து, 82 ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
அண்ணல் அம்பேத்கர் வணிக முன்னோடி திட்டத்தில், ரூ.31.68 கோடிக்கு, 77 திட்ட அறிக்கைகள் வழங்கப்பட்டன.
இவை பரிசீலிக்கப்பட்டு, ஒன்பது கோடியே, 44 லட்சத்து, 66 ஆயிரம் ரூபாய் மானியமாக விடுக்கப்பட்டுள்ளது.