/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.76 லட்சம் மோசடி; ஒருவர் கைதுசிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.76 லட்சம் மோசடி; ஒருவர் கைது
சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.76 லட்சம் மோசடி; ஒருவர் கைது
சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.76 லட்சம் மோசடி; ஒருவர் கைது
சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.76 லட்சம் மோசடி; ஒருவர் கைது
ADDED : ஜூலை 07, 2024 12:46 AM
வடவள்ளி;வடவள்ளியில், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 1.76 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆலத்தூரை சேர்ந்தவர் புருஷோத்குமார்,30; கூலித்தொழிலாளி. இவரிடம், பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர், கோவையில் உள்ள ஒருவர் வெளிநாட்டிற்கு ஆள் அனுப்பும் வேலை செய்து வருவதாகவும், அவர் மூலம் நான் வெளிநாடு சென்று சிறிது காலம் வேலை செய்து வந்ததாகவும் கூறி, கோவை, வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீனிவாசன்,59 என்பவரது எண்ணை கொடுத்துள்ளார்.
புருஷோத் குமார், ஸ்ரீனிவாசனை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தான் வெளிநாட்டிற்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி வைத்துள்ளதாகவும், சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.
அதற்கு, முன்பணம் தர வேண்டும்; வேலைக்கு சென்றதும் மீதி பணத்தை தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய புருஷோத் குமார், சிறிது சிறிதாக 1.76 லட்சம் ரூபாயை, ஸ்ரீனிவாசனிடம் கொடுத்துள்ளார்.
ஓராண்டாகியும், வேலை வாங்கித் தராததால் புருஷோத் குமார், ஸ்ரீனிவாசனிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஸ்ரீனிவாசன் பணத்தை கொடுக்காமல், ஏமாற்றி வந்துள்ளார். புருஷோத்குமார் வடவள்ளி போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, ஸ்ரீனிவாசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.