/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டோரம் 'பார்க்கிங்' பகுதியானது; பாதிக்கிறது போக்குவரத்து! ரோட்டோரம் 'பார்க்கிங்' பகுதியானது; பாதிக்கிறது போக்குவரத்து!
ரோட்டோரம் 'பார்க்கிங்' பகுதியானது; பாதிக்கிறது போக்குவரத்து!
ரோட்டோரம் 'பார்க்கிங்' பகுதியானது; பாதிக்கிறது போக்குவரத்து!
ரோட்டோரம் 'பார்க்கிங்' பகுதியானது; பாதிக்கிறது போக்குவரத்து!

மழைநீர் தேக்கம்
பொள்ளாச்சி, கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் மாகாளியம்மன் கோவில் அருகில் உள்ள கால்வாயில், மழை நீர் அதிக அளவு தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தூய்மை பணியாளர்கள் இதை கவனித்து, தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்ற வேண்டும்.
ரோட்டில் கால்நடைகள்
பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், நந்தனார் காலனி அருகே, அதிக அளவிலான ஆடுகள் உலா வருகின்றன. இதனால், ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன், விபத்து நடக்கவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, ரோட்டில் வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி, காந்தி சிலை முதல் மகாலிங்கபுரம் ஆர்ச் வரை ரோட்டோரத்தில் அதிக அளவு வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால், போக்குவரத்து நெரிசல் அடிக்கடி நிலவுகிறது. இதை போக்குவரத்து போலீசார் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேம்பாலத்தில் பாதிப்பு
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் மழைநீர் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் பயணிக்க சிரமப்படுகின்றனர். இதை நெடுஞ்சாலைத்துறையினர் கவனித்து அங்குள்ள வடிகால் துவாரங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
ரோட்டில் பள்ளம்
பொள்ளாச்சி, மார்க்கெட் ரோடு செல்லும் வழியில் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். சிலர் தடுமாறி கீழே விழ அதிக வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
இருக்கைகள் சேதம்
கிணத்துக்கடவு, கோதவாடியில் இருந்து செட்டியக்காபாளையம் செல்லும் ரோட்டில், பஸ் ஸ்டாப் பகுதிகளில், பயணியர் அமரும் இருக்கைகள் சேதம் அடைந்து உள்ளது. இதனால், பஸ் பயணியர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணியர் நலன் கருதி இருக்கையை மாற்றியமைக்க வேண்டும்.
நாய்கள் தொல்லை
உடுமலை நகராட்சி கிரீன் பார்க் லே அவுட்டில், தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவை ரோட்டில் போவோர், வருவோரை எல்லாம் விரட்டி தாக்குகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, சிவலிங்கம் பிள்ளை லே -அவுட்டில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் இரவில் அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இருள் சூழ்ந்த வீதியில் நடப்பதற்கும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
விதிமீறும் வாகனங்கள்
தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநி ரோட்டில் ரோட்டோரம் வாகனங்கள் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விதிமீறும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர்மின்விளக்கு பழுது
உடுமலை - பழநி ரோட்டில் சென்டர் மீடியனில் உள்ள உயர்மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. இரவு நேரத்தில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை காண முடியாமல் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
சேதமடைந்த ரோடு
உடுமலை, கணக்கம்பாளையம் பி.வி., லே -அவுட் பகுதியில் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைநீர் தேங்கி குளமாக மாறியுள்ளது. அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் தொலைதுாரம் சென்று வருகின்றனர். ரோட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் சீரமைக்க வேண்டும்.
ரோட்டில் நீர் தேக்கம்
உடுமலை - பழநி ரோட்டில், ஸ்ரீ நகர் சந்திப்பில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் தேங்காத வண்ணம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.