/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளாஸ்டிக் பயன்பாடால் ஆபத்து; துணிப்பை பயன்படுத்த அறிவுரை பிளாஸ்டிக் பயன்பாடால் ஆபத்து; துணிப்பை பயன்படுத்த அறிவுரை
பிளாஸ்டிக் பயன்பாடால் ஆபத்து; துணிப்பை பயன்படுத்த அறிவுரை
பிளாஸ்டிக் பயன்பாடால் ஆபத்து; துணிப்பை பயன்படுத்த அறிவுரை
பிளாஸ்டிக் பயன்பாடால் ஆபத்து; துணிப்பை பயன்படுத்த அறிவுரை
ADDED : ஜூலை 03, 2024 09:22 PM

ஆனைமலை : ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு கட்டுரை, கவிதை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் கிட்டுச்சாமி, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தலைமை ஆசிரியர் கூறியதாவது: பிளாஸ்டிக் பயன்படுத்தும் போது, அது எளிதில் மக்குவதில்லை மற்றும் விலங்குகள், மனிதர்கள், பறவைகள் போன்றவைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது. ஏராளமான பிளாஸ்டிக் நிலத்தில் புதைந்து மழைநீர் சேராமல் தடுக்கிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை.
மேலும், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கால்நடைகள் உயிருக்கு பிளாஸ்டிக் ஆபத்தை விளைவிக்கிறது. எனவே, பிளாஸ்டிக்கை முழுமையாக தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்.
மஞ்சப்பையை பயன்படுத்துவதன் வாயிலாக எதிர்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பாக தர முடியும். ஆகையால், மாணவர்கள் இன்றிலிருந்து தமிழக அரசின் வேண்டுகோளின்படி மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
பள்ளியின் தேசிய பசுமைப்படை ஆசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.