/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தோட்டக்கலை மானியத்துக்கு முன்பதிவு அவசியம்! பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு தோட்டக்கலை மானியத்துக்கு முன்பதிவு அவசியம்! பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தோட்டக்கலை மானியத்துக்கு முன்பதிவு அவசியம்! பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தோட்டக்கலை மானியத்துக்கு முன்பதிவு அவசியம்! பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தோட்டக்கலை மானியத்துக்கு முன்பதிவு அவசியம்! பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 18, 2024 11:01 PM
ஆனைமலை:தோட்டக்கலைத்துறை மானியத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள முன்பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம், என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்தார்.
ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் அறிக்கை வருமாறு: ஆனைமலை வட்டாரத்தில், நடப்பாண்டில் விவசாயிகளுக்கு பல்வேறு மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்கம் (என்.எச்.எம்.,) 2024 - 25ல் பரப்பு விரிவாக்க திட்டத்தில், தக்காளி, கத்தரி, பாகற்காய், பப்பாளி, மா, பலா, வாழை மற்றும் எலுமிச்சை போன்றவை மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
மேலும், தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய், கோகோ மற்றும் குறுமிளகு நாற்றுகளும், உயிர் உரங்களும் மானியத்திட்டத்தில் வழங்கப்பட உள்ளது.
களைச்செடிகளை கட்டுப்படுத்தி நீர் சேமிப்பினை உயர்த்தி, மகசூலை அதிகப்படுத்தும் நிலப்போர்வை வழங்கும் திட்டமும், மகரந்தச்சேர்க்கையை அதிகரிக்கும் தேன் பெட்டி வழங்கும் திட்டம், மண்ணின் உயிர் தன்மையை அதிகரிக்க உயிர் காக்கும் மண்புழு உரம் உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
விவசாய விளை பொருட்களை தரம் பிரித்து, சுத்தப்படுத்தி சந்தைப்படுத்துதலுக்கு சிப்பம் கட்டும் அறையும், தண்ணீரை சேமிக்கும் நீர் சேமிப்பு கட்டமைப்புக்கும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் நடப்பாண்டில் மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்துக்கு, ஆனைமலை வட்டாரத்துக்கு மட்டும், 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களில் பயனடைய விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி வாயிலாகவோ அல்லது தோட்டக்கலை அலுவலகத்தினை நேரிடையாகவோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.