/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சமுதாயக் கூடம் கட்ட நிதி அமைச்சரிடம் கோரிக்கை சமுதாயக் கூடம் கட்ட நிதி அமைச்சரிடம் கோரிக்கை
சமுதாயக் கூடம் கட்ட நிதி அமைச்சரிடம் கோரிக்கை
சமுதாயக் கூடம் கட்ட நிதி அமைச்சரிடம் கோரிக்கை
சமுதாயக் கூடம் கட்ட நிதி அமைச்சரிடம் கோரிக்கை
ADDED : ஜூலை 22, 2024 02:54 AM
மேட்டுப்பாளையம்;ஜடையம்பாளையம்புதூரில், சமுதாயக்கூடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யும்படி, ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் கோரிக்கை விடுத்தனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியம், ஜடையம்பாளையம் ஊராட்சி, ஜடையம்பாளையம் புதூரில் உள்ள மந்தை மாரியம்மன் கோவிலில், சுமங்கலிபூஜை நடைபெற்றது. பூஜையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்றார்.
அப்போது ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் பொதுமக்கள் சார்பில், சமுதாயக் கூடம் கட்ட, நிதி ஒதுக்கும்படி கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் கூறியுள்ளதாவது:
ஜடையம்பாளையம் புதூர் கிராமத்தைச் சுற்றி குறிஞ்சி நகர், சக்தி நகர், இனியா நகர், ஜடையம்பாளையம், அப்துல் கலாம் நகர், ஐஸ்வர்யா நகர் என ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், மையப்பகுதியான ஜடையம்பாளையம் புதூரில், சமுதாயக் கூடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.