ADDED : ஜூன் 06, 2024 06:40 AM
கோவை : லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடந்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.
கோவை நகரில் வார்டுதோறும் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிக்கொடிக்கம்பங்கள், தொழிற்சங்கங்களின் கொடிக்கம்பங்கள் துணி மற்றும் சாக்குகளால் மூடி, கட்டி வைக்கப்பட்டிருந்தன. அவை அப்புறப்படுத்தப்பட்டன.
எம்.எல்.ஏ., அலுவலகங்கள் மூடப்பட்டு, தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவை திறக்கப்பட்டு, அந்தந்த எம்.எல்.ஏ.,அலுவலக சாவிகள் அனைத்தும் சம்மந்தப்பட்டவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.