/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உயர்கல்வி ஆசிரியர்களுக்கும் விருது விண்ணப்பங்கள் பதிவு துவக்கம் உயர்கல்வி ஆசிரியர்களுக்கும் விருது விண்ணப்பங்கள் பதிவு துவக்கம்
உயர்கல்வி ஆசிரியர்களுக்கும் விருது விண்ணப்பங்கள் பதிவு துவக்கம்
உயர்கல்வி ஆசிரியர்களுக்கும் விருது விண்ணப்பங்கள் பதிவு துவக்கம்
உயர்கல்வி ஆசிரியர்களுக்கும் விருது விண்ணப்பங்கள் பதிவு துவக்கம்
ADDED : ஜூன் 03, 2024 01:33 AM
கோவை:உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, 2024ம் ஆண்டுதேசிய விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ், நல்லாசிரியர் விருது மாநில அளவிலும், தேசிய அளவிலும் வழங்கப்படும். உயர்கல்வித்துறையில், பல்வேறு பிரிவுகள் இருந்ததால், இவ்விருது வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், புதிய தேசிய கல்விக்கொள்கையின் படி, 2024ம் ஆண்டு முதல் உயர்கல்வித்துறையின் கீழ், தகுதியான ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
இவ்விருது, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கட்டடவியல், கலை அறிவியல், அறிவியல் , மருத்துவம், பார்மசி, மொழி, சட்டம், பாலிடெக்னிக், மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், ஆசிரியர்களுக்கு, 35 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான விதிமுறைகள், விண்ணப்ப செயல்பாடுகளை, https://www.ugc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
தகுதியுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்க, வரும் 20ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.