Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆயத்த ஆடை உற்பத்தி மையம்; பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு 

ஆயத்த ஆடை உற்பத்தி மையம்; பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு 

ஆயத்த ஆடை உற்பத்தி மையம்; பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு 

ஆயத்த ஆடை உற்பத்தி மையம்; பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு 

ADDED : ஆக 01, 2024 01:46 AM


Google News
கோவை : பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, ஆயத்த ஆடை உற்பத்தி மையம் அமைக்கலாம்.

இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:

தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில், ஆயத்த ஆடையாக உற்பத்தி மையம் அமைக்க, தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ஆயத்த ஆடை உற்பத்தி மையம் அமைப்பதற்கு, தேவையான இயந்திரங்கள் மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் 30,00,000 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க, பத்து நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருவாய், ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பது அவசியம்.

இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us