/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகராட்சி பள்ளிகளுக்கான தடகளம் ரத்தினபுரி பள்ளி சாம்பியன்மாநகராட்சி பள்ளிகளுக்கான தடகளம் ரத்தினபுரி பள்ளி சாம்பியன்
மாநகராட்சி பள்ளிகளுக்கான தடகளம் ரத்தினபுரி பள்ளி சாம்பியன்
மாநகராட்சி பள்ளிகளுக்கான தடகளம் ரத்தினபுரி பள்ளி சாம்பியன்
மாநகராட்சி பள்ளிகளுக்கான தடகளம் ரத்தினபுரி பள்ளி சாம்பியன்
ADDED : ஜூலை 15, 2024 02:07 AM

கோவை,:கோவையில் முதல் முறையாக நடத்தப்பட்ட மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான தடகளப்போட்டியில் ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி சாம்பியன் கோப்பையை வென்றது.
கோவை மாநகராட்சி கமிஷனரின் உத்தரவின் பேரில், கோவை தடகள கிளப் மற்றும் வி.ஜி.எம்., மருத்துவமனை சார்பில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுத்தும் விதமாக, முதலாம் ஆண்டு கோவை மாநகராட்சி இன்டர் ஸ்கூல் தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 12, 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் மாணவ - மாணவியருக்கு 100மீ., 200மீ., 600மீ., 800மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார். துணை கமிஷனர் செல்வ சுரபி, துணை மேயர் வெற்றிச்செல்வன், வி.ஜி.எம்., மருத்துவமனை மருத்துவர் சுமன் மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா, கோவை மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதன் மாணவர் பிரிவில் ரத்தினபுரி பள்ளி அணி 39 புள்ளிகள் எடுத்து முதலிடமும், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 37 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடத்தையும் பிடித்தன. மாணவியர் பிரிவில் ஒப்பணக்காரவீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 37 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி அணி 23 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பிடித்தன.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ரத்தினபுரி பள்ளி அணி 62 புள்ளிகளுடன் தட்டிச்சென்றது.
வடகோவை மாநகராட்சி பள்ளி 40 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்படுகின்றனர்.