/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரேஷன் கடை பணியாளர்கள் போலீசில் மனு ரேஷன் கடை பணியாளர்கள் போலீசில் மனு
ரேஷன் கடை பணியாளர்கள் போலீசில் மனு
ரேஷன் கடை பணியாளர்கள் போலீசில் மனு
ரேஷன் கடை பணியாளர்கள் போலீசில் மனு
ADDED : ஜூன் 05, 2024 11:16 PM
கோவை: ரேஷன் கடை பணியாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் திரைப்பட காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு, மாநகர போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், 'புதிதாக வெளியாகியுள்ள ஒரு திரைப்படத்தில், 'ரேஷன் கடைக்கு போகும்போது ஒவ்வொரு முறை பணம் வாங்கும்போதும் அவன் என் கையை தொட்டு தொட்டு வாங்குறான். இதெல்லாம் சகிச்சுக்கிட்டு குடும்பத்தை காப்பாற்றுகிறேன்' என, நடிகை நடித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை, இந்த காட்சிகள் மிகவும் புண்படுத்துகின்றன. இக்காட்சிகளை நீக்குவதுடன், நடிகர்கள், இயக்குனர் மீது வழக்கு பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்' என தெரிவித்துள்ளார்.