/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன், புதிய ஷோரூம் திறப்பு மேட்டுப்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன், புதிய ஷோரூம் திறப்பு
மேட்டுப்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன், புதிய ஷோரூம் திறப்பு
மேட்டுப்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன், புதிய ஷோரூம் திறப்பு
மேட்டுப்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன், புதிய ஷோரூம் திறப்பு
ADDED : ஜூலை 27, 2024 12:44 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன், புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழா காரமடை ரோடு, ஆக்ஸிஸ் வங்கி எதிரில் மேட்டுப்பாளையத்தில் நேற்று நடந்தது. விழாவில், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
புதிய ஷோரூமை, மேட்டுப்பாளையம் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை செயலாளர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். முதல் விற்பனையை மேட்டுப்பாளையம் முத்து பைனான்ஸ் கந்தசாமி துவக்க, எஸ்.கே.எஸ்.டி. சிட்பண்ட்ஸ் சேர்மன் நாகராஜ் பெற்று கொண்டார். மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், மேட்டுப்பாளையம் சூப்பர் ஆட்டோ ஸ்பேர்ஸ் ஜோதிமணி உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றினர். விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் கூறுகையில், ஆண்களுக்கான ஆடைகள் மட்டுமின்றி, இப்போது பெண்களுக்கான, காட்டன் சேலைகள், பட்டு சேலைகள் மற்றும் சுடிதார் உள்ளிட்ட பல ஆடைகளுக்கான தனி பிரிவுகளும் துவங்கப்பட்டுள்ளது' என்றார்.