/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சூலுார் தாலுகாவில் ஆறு இடங்களில் மழை மானிகள் சூலுார் தாலுகாவில் ஆறு இடங்களில் மழை மானிகள்
சூலுார் தாலுகாவில் ஆறு இடங்களில் மழை மானிகள்
சூலுார் தாலுகாவில் ஆறு இடங்களில் மழை மானிகள்
சூலுார் தாலுகாவில் ஆறு இடங்களில் மழை மானிகள்
ADDED : ஜூன் 11, 2024 11:18 PM

சூலுார்:சூலுார் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட ஆறு இடங்களில் தானியங்கி மழை மானி நிறுவப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சூலுார் தாலுகாவில், கருமத்தம்பட்டி, சூலுார், செலக்கரச்சல், வாரப்பட்டி ஆகிய உள் வட்டங்கள் உள்ளன. 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
சூலுார் தாலுகாவில் மழை பெய்தால், சூலுாரில் உள்ள பழைய சார் பதிவாளர் அலுவலகம், வாரப்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள மழை மானிகள் மூலம் மழையளவு கணக்கிடப்பட்டு வந்தது. மேலும், அரசூர் கிராமத்தில் தனியார் பராமரிப்பில் ஒரு மழை மானி உள்ளது.
தாலுகாவில், கூடுதலாக மழை மானிகளை நிறுவ வேண்டும் என விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பேரிடர் மேலாண்மை துறை சார்பில், சூலுார் தாலுகாவில் ஆறு இடங்களில் தானியங்கி மழை மானிகள் நிறுவ திட்டமிடப்பட்டது. இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் கூறுகையில்,சூலுார் தாலுகாவில், தாலுகா அலுவலகம், அரசூர், செலக்கரச்சல் மற்றும் போகம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், வாரப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சோமனூர் நகராட்சி அலுவலகம் ஆகிய ஆறு இடங்களில் தானியங்கி மழை மானி நிறுவ திட்டமிடப்பட்டது.
கடந்த மாதம் அதற்கான பணிகள் நடந்தன. தற்போது ஆறு இடங்களிலும் மழை மானிகள் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன,' என்றனர்.