/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துப்பாக்கி சுடும் போட்டியில் ரயில்வே போலீசுக்கு தங்கம் துப்பாக்கி சுடும் போட்டியில் ரயில்வே போலீசுக்கு தங்கம்
துப்பாக்கி சுடும் போட்டியில் ரயில்வே போலீசுக்கு தங்கம்
துப்பாக்கி சுடும் போட்டியில் ரயில்வே போலீசுக்கு தங்கம்
துப்பாக்கி சுடும் போட்டியில் ரயில்வே போலீசுக்கு தங்கம்
ADDED : ஜூன் 18, 2024 11:54 PM

கோவை;செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த, தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கோவை ரயில்வே பெண் போலீஸ் ரூபாவதி தங்கம் வென்றார்.
தமிழ்நாடு போலீஸ் சார்பில், மாநில அளவிலான மகளிர் போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மகளிர் போலீசாருக்கான அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி, தற்போது செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில், நடைபெற்று வருகிறது.
இதில், ரைபிள், பிஸ்டல், ரிவால்வர், கார்பைன், ஸ்டென்கன் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 450க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றுள்ளனர்.இப்போட்டியில், கோவை ரயில்வே காவல் நிலைய பெண் தலைமை காவலர் ரூபாவதி, தங்கம் வென்று அசத்தினார்.