/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காட்சிப்பொருளாக சுத்திகரிப்பு குடிநீர் கருவி பயணியர் தவிப்பு காட்சிப்பொருளாக சுத்திகரிப்பு குடிநீர் கருவி பயணியர் தவிப்பு
காட்சிப்பொருளாக சுத்திகரிப்பு குடிநீர் கருவி பயணியர் தவிப்பு
காட்சிப்பொருளாக சுத்திகரிப்பு குடிநீர் கருவி பயணியர் தவிப்பு
காட்சிப்பொருளாக சுத்திகரிப்பு குடிநீர் கருவி பயணியர் தவிப்பு
ADDED : ஜூன் 23, 2024 11:52 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி புது பஸ்ஸ்டாண்டில் சுத்திகரிப்பு குடிநீர் கருவி போதிய பராமரிப்பின்றி உள்ளன. இதனால், பயணியர், விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. கோவை, பழநி, திருப்பூர் உள்ளிட்ட புற நகர்களுக்கு செல்லும் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டுக்கும்; வால்பாறை, கேரளா மற்றும் பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்டுக்கும் வந்து செல்கின்றன.
தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஸ்ஸ்டாண்டுக்கு வரும் பயணியர், குடிநீர் கிடைக்காமல் திண்டாடும் நிலை உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், கேரளா மாநில பஸ்கள் நிறுத்தப்பகுதி மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்கள் அருகே என, இரண்டு இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து குடிநீர் வினியோகிக்கப்பட்டது. மேலும், குடிநீர் குழாய்களும் வசதிக்காக அமைக்கப்பட்டு இருந்தன.
ஆனால், எந்த குழாயிலும் குடிநீர் வருவதில்லை; அவை வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன. அவற்றில் இருந்து வெறும் காற்று மட்டுமே வருகிறது.
குடிநீர் குழாய்கள் சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலையும் நிலை உள்ளது.
பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பயணியர், விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் குழாய்களை சீரமைக்க அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தினால் பயனாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.