/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு கலைக் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு அரசு கலைக் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு
அரசு கலைக் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு
அரசு கலைக் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு
அரசு கலைக் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு
ADDED : ஜூன் 06, 2024 06:37 AM
கோவை : கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவுகள், கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கோவை அரசு கலைக் கல்லூரியில், 2023 -- 2024 கல்வியாண்டின் இரட்டைப் பருவத் தேர்வுகள் ஏப்., 23 முதல் மே 10ம் தேதி வரை நடத்தப்பட்டது. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வை எழுதியிருந்தனர்.
தேர்வு முடிவுகள் கல்லூரியின், www.gacbe.ac.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்கள் பதிவெண்ணை உள்ளீடு செய்து, தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என, அரசு கலை அறிவியல் கல்லூரியின், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.