ADDED : ஜூலை 24, 2024 08:40 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில், 'ஆண்டாள் அறக்கட்டளை' சார்பில் ஆம்புலன்ஸ் ஓட்டுர்நகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தலைமை வகித்தார்.
அறக்கட்டளை நிறுவனர் சாந்தலிங்கம், மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கினார். நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் வெள்ளை நடராஜ், கிட்டான் ஆகியோர் கலந்து கொண்டனர்.