Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விற்பனைக்கு வருதா சொத்துகள்? வாங்கும் போது கவனம் தேவை என எச்சரிக்கை

விற்பனைக்கு வருதா சொத்துகள்? வாங்கும் போது கவனம் தேவை என எச்சரிக்கை

விற்பனைக்கு வருதா சொத்துகள்? வாங்கும் போது கவனம் தேவை என எச்சரிக்கை

விற்பனைக்கு வருதா சொத்துகள்? வாங்கும் போது கவனம் தேவை என எச்சரிக்கை

ADDED : ஜூலை 27, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
''வங்கியில் ஏலம் வாயிலாக விற்பனைக்கு வரும் சொத்துக்களை வாங்கும் போது, கவனம் தேவை,'' என்று எச்சரிக்கிறார், கோவை வக்கீல் வடவள்ளி நாகராஜன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர், தனது சொத்தை விற்பதற்காக பவர் கொடுத்த பின், பவர் வாங்கிய நபர், தான் கிரைய ஒப்பந்தத்தில் விற்பவராக கையொப்பமிட வேண்டும்.

சில சமயங்களில் ஒப்பந்தம் தயாரித்து, அதை தபால் வாயிலாக உரிமையாளருக்கு (விற்பவருக்கு) அனுப்பி, கையொப்பம் பெற்று ஒப்பந்தம் செய்கிறார்கள். இது ஏற்புடையதல்ல. ஏனெனில், முத்திரை தாள் வாங்கியது, உள்ளூரில் உள்ள ஸ்டாம்ப் வென்டரிடமாக இருக்கும்.

ஒப்பந்தத்தில் சாட்சிகள் விலாசம், சொத்து வாங்குபவர் அனைவரும் உள்நாட்டிலேயே இருப்பதால், ஒரு வேளை இரு தரப்புக்கும் பிரச்னை ஏற்படும் போது, நீதிமன்றத்தில் அந்த ஒப்பந்தம் தாக்கல் செய்யப்படும் போது, ஒப்பந்தமே நிராகரிக்கப்படலாம். ஏனெனில், ஒப்பந்தம் கையெழுத்து செய்த தேதியில், விற்பவர் வெளிநாட்டில் இருந்திருப்பார். இதில் கவனம் தேவை.

ஏலத்துக்கு வரும் வீடா?


வங்கியில் ஏலம் வாயிலாக, விற்பனைக்கு வரும் சொத்துக்களை வாங்கும் போது, கவனம் தேவை. ஏனெனில், சில சமயம் ஏலத்துக்கு வரும் அதே சொத்தை ஈடாக வைத்து உரிமையாளர் வேறு தனி நபர்களிடமோ, தனியார் நிதி நிறுவனத்திடமோ கடன் பெற்றிருக்கிறாரா, அவ்வாறு கடன் கொடுத்த நபர், அக்கடனை வசூலிக்க வழக்கு எதுவும் தாக்கல் செய்து, நிலுவையில் உள்ளதா என்று சரிபார்த்த பிறகே, ஏல சொத்துக்களை வாங்க வேண்டும். இல்லாவிடில், பின்னாளில் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.

அங்கீகரிக்கப்படாத மனைகள் வரைமுறைப்படுத்தி இருந்தாலும், அந்த குறிப்பிட்ட மனை, கடந்த 2016 அக்., 20ம் தேதிக்கு முன்பாக மனையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

ஏனெனில், சென்னை உயர்நீதிமன்றத்தால் அங்கீகாரமற்ற மனை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை, இன்றும் அமலில் உள்ளது. 2016 அக்., 20ம் தேதிக்கு பிறகு, பதியப்பட்ட அங்கீகாரமற்ற மனைகள் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. இதில் கவனம் தேவை.

இவ்வாறு, அவர் கூறினார்.

தொடர்புக்கு: 98422 50145.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us