/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அகில இந்திய மருத்துவ தகுதித்தேர்வில் சாதனை அகில இந்திய மருத்துவ தகுதித்தேர்வில் சாதனை
அகில இந்திய மருத்துவ தகுதித்தேர்வில் சாதனை
அகில இந்திய மருத்துவ தகுதித்தேர்வில் சாதனை
அகில இந்திய மருத்துவ தகுதித்தேர்வில் சாதனை
UPDATED : ஜூலை 22, 2024 03:15 AM
ADDED : ஜூலை 22, 2024 01:16 AM
கோவை;வெளிநாடுகளில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள், இந்தியாவில் பணிபுரிய வேண்டுமானால், அகில இந்திய அளவில் நடைபெறும், மருத்துவ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
கடந்த 6ம் தேதி தேசியளவில் நடந்த இந்த தேர்வில், சிங்காநல்லுார் அடுத்த வெள்ளலுாரை சேர்ந்த, சுப்புராஜ் என்பவரது மகன் தினேஷ், தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2018ம் ஆண்டு வெள்ளலுார், எல்ஜி மெட்ரிக் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த இவர், கிங்ஸ் அப்ராட் எஜூகேஷன் என்ற ஏஜென்சி மூலமாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தவோ மருத்துவ கல்லுாரியில், படிப்பை முடித்தார். அகில இந்திய மருத்துவ தகுதித்தேர்வில், இரண்டாம் இடம் பிடித்த தினேஷை, கிங்ஸ் அப்ராட் எஜூகேஷன் நிறுவனத்தின் தலைவர் மேஷாக் சுந்தர்சிங் வாழ்த்தினார்.