/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மக்கள் ஆதரவை திரட்ட திட்டப் பணி ஜரூர்: உள்ளாட்சி தேர்தலுக்கு தி.மு.க., ஆயத்தம் மக்கள் ஆதரவை திரட்ட திட்டப் பணி ஜரூர்: உள்ளாட்சி தேர்தலுக்கு தி.மு.க., ஆயத்தம்
மக்கள் ஆதரவை திரட்ட திட்டப் பணி ஜரூர்: உள்ளாட்சி தேர்தலுக்கு தி.மு.க., ஆயத்தம்
மக்கள் ஆதரவை திரட்ட திட்டப் பணி ஜரூர்: உள்ளாட்சி தேர்தலுக்கு தி.மு.க., ஆயத்தம்
மக்கள் ஆதரவை திரட்ட திட்டப் பணி ஜரூர்: உள்ளாட்சி தேர்தலுக்கு தி.மு.க., ஆயத்தம்
ADDED : ஜூன் 15, 2024 12:09 AM
பொள்ளாச்சி;உள்ளாட்சித் தேர்தலில், மக்களின் ஆதரவை பெறுவதற்காகவே, தி.மு.க., அரசு, ஒவ்வொரு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களிலும், திட்டப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
கடந்த, 2019ல் நடந்த தேர்தலி வெற்றி பெற்ற, உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், இந்தாண்டு டிசம்பரில் முடிகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில், தமிழக அரசும், மாநில தேர்தல் கமிஷனும் உள்ளன.
இந்நிலையில், இரு கட்டங்களாக தேர்தல் நடந்தாலும், தற்போது சாதகமான சூழல் உள்ளதால், உள்ளாட்சி அமைப்பு நிர்வாக பதவிகளை கூண்டோடு கலைத்து விட்டு, புதிதாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த தி.மு.க., அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், அரசு மீதான மக்கள் நம்பிக்கை என்றும் மாறாமல் இருக்க, தற்போது பல்வேறு திட்டங்களும் துவக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சியில் ஒன்றியங்கள், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல துறைகளில், சாலை அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் என, பல்வேறு திட்டப் பணிகளுக்காக நிதி ஒதுக்கி விடுவிக்கப்பட்டுள்ளது. 'டெண்டர்' கோரப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பணிகள் மேற்கொண்டும் வருகின்றனர்.
இப்போதிருந்தே மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தி.மு.க., கட்சியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், பணிகள் மேற்கொள்ளும் இடத்தில் 'போட்டோ' எடுத்து 'வாட்ஸ்ஆப்' குழுக்கள் வாயிலாக பகிரவும் முனைப்பு காட்டுகின்றனர்.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'டிச.,ல், ஊராட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, நிறைய திட்டப்பணிகளை செய்து முடித்தால், மக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பர் என, தி.மு.க., அரசு முனைப்பு காட்டுகிறது,' என்றனர்.