/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரபி பருவத்துக்கு விதைகள் உற்பத்தி ரபி பருவத்துக்கு விதைகள் உற்பத்தி
ரபி பருவத்துக்கு விதைகள் உற்பத்தி
ரபி பருவத்துக்கு விதைகள் உற்பத்தி
ரபி பருவத்துக்கு விதைகள் உற்பத்தி
ADDED : ஜூலை 15, 2024 02:26 AM

சூலுார்:''ரபி பருவத்துக்கு தேவையான சோளம்,உளுந்து, பாசிப்பயிறு விதைகள் உற்பத்தி செய்யும் பணி தற்போது நடக்கிறது,'' என, விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று துறை உதவி இயக்குனர் மாரிமுத்து கூறினார்.
சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் சித்திரை பட்டத்தில் விதைத்த சோளப்பயிர்கள், தற்போது முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அங்கு ஆய்வு செய்த விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று துறை உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:
விதைத்தரத்தினை நிர்ணயிக்கும் கலவன் கணக்கீடு, விதை வழி பரவும் நோய்களான கரிப்பூட்டை, சோரி கெர்னல் ஸ்மட் போன்றவற்றின் கணக்கீடு, இப்பருவத்தில் மேற்கொள்ளப்படும். இதனால், அடுத்த பயிர் தலைமுறையில் நோய் தாக்குதல் இல்லாமல், இனத்துாய்மை பாதுகாக்கப்பட்டு, சிறந்த தரமான விதைகள், விவசாயிகளுக்கு வழங்க முடியும். மேலும், அறுவடையான பின், விதைக்குவியல்களில், பரிந்துரைக்கப்பட்ட நீர், 12 சதவீதத்துக்குள் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
இதன் மூலம் நீண்ட நாள் விதை இருப்பை வைக்க முடியும். 'தமிழ்நாடு சான்று பெற்ற விதைகள்' என அச்சடிக்கப்பட்ட சாக்கு பைகளில் நிரப்பி, சீல் வைக்கப்படும். விதை சுத்தி நிலையங்களில் விதை சுத்தி செய்யப்பட்டு, மாதிரிகள் எடுக்கப்பட்டு, பகுப்பாய்வு முடிவுகளின் படி சான்று அளித்து விவசாயிகளுக்கு வினியோகிக்க, வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகங்களுக்கு அனுப்பப்படும்.
ரபி பருவத்துக்கு தேவையான சோளம், உளுந்து, பாசிப்பயிறு, மற்றும் நிலக்கடலை விதைகள் உற்பத்தி பணி தற்போது நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.