/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி, கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்: போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு பள்ளி, கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்: போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
பள்ளி, கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்: போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
பள்ளி, கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்: போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
பள்ளி, கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்: போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜூன் 23, 2024 11:03 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், சர்வதேச யோகா தின விழா நடந்தது.
பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், சர்வதேச யோகா தினம் நடந்தது. 'சுய மற்றும் சமூகத்திற்கான யோகா' என்ற பொருளில், பொள்ளாச்சி ஆழியாறு அறிவுத்திருக்கோவில் வாழும் கலை, கோவை ஈஷா யோகா மற்றும் தேசிய மாணவர் படை அமைப்புகள் சார்பில், யோகா பயிற்சி நடந்தது.
அதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என மூன்று கட்டங்களாக யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம், திரிபாசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்யும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கல்லுாரியின் மேலாண்மை குழுவினர், கல்லுாரி முதல்வர் வனிதா மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடுமலை
உடுமலை பத்ம சூர்யா இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை சார்பில் யோகா உத்சவ் நடந்தது.
யோகா சிறப்பு நிகழ்ச்சி கொழுமம் ரோடு சி.என்.ஆர் மண்டபத்தில் நடந்தது. சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்று, கோவை ஜே.எஸ்.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லுாரி மாணவர்கள், கொங்கு இயற்கை மருத்துவ கல்லுாரி மாணவர்கள் ஒட்டுமொத்த பரிசை பெற்றனர்.
தொடர்ந்து மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான வினாடிவினா மற்றும் குழு யோகா போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் தாராபுரத்தைச் சேர்ந்த பள்ளிமாணவர்கள் பரிசு பெற்றனர்.
இயற்கை மற்றும் யோகா மருத்துவர் நிவேதா யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து யோகாசன நிகழ்வு நடந்தது. பல்வேறு பகுதிகளிலும், 470க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். உடுமலையைச்சேர்ந்த பல்வேறு தன்னார்வல அமைப்புகளின் சார்பிலும் மக்கள் பங்கேற்றனர்.
* கோட்டமங்கலம் நேஷனல் மாடல் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சரளாதேவி முன்னிலை வகித்தார். மாணவர்கள் சூரிய நமஸ்காரம், பாதஹஸ்தாசனம், கோனாசனம், திரிகோனாசனம், புஜங்காசனம், சர்வாங்காசனம், தனுராசனம் உள்ளிட்ட ஆசனங்களை நிகழ்த்தினர்.