/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வரும் 21ல் நடக்கிறது தனியார் வேலைவாய்ப்பு வரும் 21ல் நடக்கிறது தனியார் வேலைவாய்ப்பு
வரும் 21ல் நடக்கிறது தனியார் வேலைவாய்ப்பு
வரும் 21ல் நடக்கிறது தனியார் வேலைவாய்ப்பு
வரும் 21ல் நடக்கிறது தனியார் வேலைவாய்ப்பு
ADDED : ஜூன் 11, 2024 11:57 PM
பொள்ளாச்சி;கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்வாயிலாக,தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது. இம்மாதத்துக்கான முகாம்,வரும்,21ம் தேதி காலை, 10:00 மணி முதல் நடக்கிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மனுதாரர்கள், தங்களது சுயவிபரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம்.
வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தேர்வு செய்யப்படுவோருக்கு, பணி நியமன உத்தரவு அப்போதே வழங்கப்படும். இவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்தாகாது.
முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள், வேலை தேடுவோர், www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
விபரங்களுக்கு, 0422 - 2642 388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என,கோவைகலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.