ADDED : ஜூன் 25, 2024 08:40 PM
அன்னுார்:குன்னத்தூரில் வரும், 29ம் தேதி வருமுன் காப்போம் திட்டத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.
சுகாதாரத்துறை சார்பில், 'வருமுன் காப்போம்' திட்ட சிறப்பு இலவச சிறப்பு மருத்துவ முகாம், குன்னத்தூர் நடுநிலைப்பள்ளியில், வரும் 29ம் தேதி காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
ரத்தத்தில் இரும்பு சத்து அளவு, சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு பரிசோதிக்கப்படும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, சிறுநீரில் உப்பு மற்றும் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படும். ரத்த அழுத்தம், இ.சி.ஜி., ஸ்கேன் பரிசோதனைகளும் செய்யப்படும்.
குழந்தைகள், கண், இருதயம் என, 16 வகை சிறப்பு மருத்துவர்கள் இதில் பங்கேற்கின்றனர். கோவை, அன்னூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் 11 தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள் முகாமில் பங்கேற்கின்றனர்.
'இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவச அறுவை சிகிச்சையும் செய்யப்படும். எனவே பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம்' என அன்னூர் வட்டார மருத்துவ அலுவலர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.