ADDED : ஜூன் 20, 2024 05:57 AM

பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பிரதோஷ விரதம் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற, திரயோதசி திதியில், சிவபெருமானுக்கும், நந்தி தேவனுக்கும் சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு நடக்கிறது.
பொள்ளாச்சி சிங்காநல்லுார் சித்தாண்டீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை 4:00 மணிக்கு சிவபெருமானுக்கு, 16 வகையான அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, நந்தியம் பெருமானுக்கு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின், சுவாமி திரு�தி உலாவும், தொடர்ந்து பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.
இதேபோன்று, ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், ராமலிங்கேஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் அபிேஷக, அலங்கார வழிபாடும், மஹா தீபாராதனையும் நடந்தது.
ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* உடுமலை, தில்லை நகர் ரத்னலிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிகளுக்கு, பால், பன்னீர் உட்பட 16 வகையான திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது. நந்தி சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடந்தது.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் காசி விஸ்வநாதர் சுவாமிகளுக்கும், ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வர் கோவில், ருத்ரப்ப நகர் பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், மடத்துக்குளம், கொழுமம், தாண்டேஸ்வரர் கோவில், கடத்துார் அர்ச்சுணேஸ்வரர் கோவில்களில், சிறப்பு அபிேஷகத்துடன் அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
- நிருபர் குழு -