/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2024 01:15 AM
கோவை;புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்(என்.எப்.பி.இ.,) சார்பில், எட்டாவது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 18 மாத பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்ஷெட் ரோடு, தலைமை தபால் அலுவலக வளாகத்தில், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் பழனிசாமி, செயலாளர் செந்தில்குமார், கோட்ட செயல் தலைவர் முனுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.