/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 14, 2024 11:57 PM
பொள்ளாச்சி:கோவை மாவட்ட மேற்கு மண்டல அளவிலான தபால் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் அடுத்த மாதம் ஜூலை, 3 ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறைதீர் கூட்டத்தில், ஆலோசிப்பதற்கான, குறைகள் மற்றும் ஆலோசனைகளை, 'அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், பொள்ளாச்சி கோட்டம், பொள்ளாச்சி - 602001' என்ற முகவரிக்கு, தபாலில் அனுப்ப வேண்டும். அல்லது dopollachi.tn@indiapost.gov.in என்ற மின் அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
தபாலின் உறை மீதும், மின் அஞ்சலின் பொருளிலும் 'மண்டல பென்ஷன் அதாலத்' என்று குறிப்பிட வேண்டும். வரும் 20ம் தேதிக்குள் புகார்களை அனுப்ப வேண்டும்.
கோட்ட அலுவலகத்தினால் தீர்க்கப்படாத குறைகள் மட்டும் கோட்ட அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பதிலுடன் குறைதீர் கூட்டத்திற்கு அனுப்ப வேண்டும், என, அறிவிக்கப்பட்டுள்ளது.