/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தபால் குறைதீர் கூட்டம் புகார்கள் சமர்ப்பிக்கலாம் தபால் குறைதீர் கூட்டம் புகார்கள் சமர்ப்பிக்கலாம்
தபால் குறைதீர் கூட்டம் புகார்கள் சமர்ப்பிக்கலாம்
தபால் குறைதீர் கூட்டம் புகார்கள் சமர்ப்பிக்கலாம்
தபால் குறைதீர் கூட்டம் புகார்கள் சமர்ப்பிக்கலாம்
ADDED : ஜூன் 12, 2024 01:45 AM
கோவை;மண்டல அளவிலான தபால் குறைதீர் கூட்டம் ஜூன் மாதம், ஆர்.எஸ். புரம் மேற்கு மண்டல அஞ்சல் துறை அலுவலகத்தில் நடக்கவுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை, 'துணை இயக்குனர், மேற்கு மண்டல அலுவலகம், ( மெயில் அண்டு எஸ்.பி.,) ஆர்.எஸ்.புரம்., கோவை 641002' என்ற முகவரிக்கு 14ம் தேதியோ, அதற்கு முன்போ கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும். தபால் மேல், ' தபால் குறைதீர் கூட்டம் புகார்' என எழுதப்பட்டு இருக்கவேண்டும்.
பதிவு தபால், விரைவு தபால், பணவிடை சார்ந்த புகார்களில் தபால் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநர், பெறுநர் முழுமையான விபரங்கள், தபால் பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிடவேண்டும்.
தபால் சேமிப்பு கணக்கு, காப்பீடு, தொடர்பான புகாரில் கணக்கு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டாளர் உள்ளிட்ட முழுமையான விபரங்களை குறிப்பிட வேண்டும். குறைதீர் கூட்டம் குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, தமிழ்நாடு வட்டம், மேற்குமண்டல அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.