/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரு நாட்கள் தொடர் மழை: சில்லென மாறிய பொள்ளாச்சி இரு நாட்கள் தொடர் மழை: சில்லென மாறிய பொள்ளாச்சி
இரு நாட்கள் தொடர் மழை: சில்லென மாறிய பொள்ளாச்சி
இரு நாட்கள் தொடர் மழை: சில்லென மாறிய பொள்ளாச்சி
இரு நாட்கள் தொடர் மழை: சில்லென மாறிய பொள்ளாச்சி
ADDED : ஜூன் 25, 2024 11:30 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், சீதோஷ்ணநிலை சில்லென மாறியுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் மற்றும் மழை மாறி மாறி பெய்வதால் சீதோஷ்ண நிலை மாறியது. கடந்த, இரண்டு நாட்களாக சில்லென்ற காற்றுடன் சாரல் மழை பெய்தது.
நேற்றுமுன்தினம் காலை முதல் சிறு இடைவெளி விட்டு, மழை பெய்து கொண்டே இருக்கிறது. இரவு நேரத்தில் இடைவிடாமல் மழை பெய்ததால், ரோடுகளில் மழைநீர் ஓடியது.
மேலும், கால்வாய்களில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து ரோட்டில் ஓடியதால் வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
தொடர்ந்து, நேற்று காலை முதலே மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குடை மற்றும் மழைக்கவசம் அணிந்தபடியே பொதுமக்கள் சென்றனர். மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கினாலும், தற்போது தான் தொடர் மழையும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் நிலவுகிறது.