/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 17.5 பவுன் நகை திருட்டு போலீஸ் விசாரணை 17.5 பவுன் நகை திருட்டு போலீஸ் விசாரணை
17.5 பவுன் நகை திருட்டு போலீஸ் விசாரணை
17.5 பவுன் நகை திருட்டு போலீஸ் விசாரணை
17.5 பவுன் நகை திருட்டு போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 30, 2024 12:59 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, பூட்டிய வீட்டை உடைத்து, 17.5 பவுன் நகையை திருடிய நபர்கள் குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே, ராசக்காபாளையத்தை சேர்ந்தவர் ஜன்னல், கதவு ஸ்கிரீன் ஷாப் உரிமையாளர் சீனிவாசன்,55. இவர், கடந்த, 26ம் தேதி வெளியூருக்கு குடும்பத்துடன் சென்றார்.
அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக அருகில் வசிப்போர், சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரித்தனர். அதில், பீரோவில் இருந்த, 17.5 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.