/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாக்கெட் நிரப்பும் போலீஸ்! சட்டவிரோத 'பார்'களாக மாறிய ஓட்டல்கள்; கோவையில் களையெடுப்பாரா டி.ஜி.பி.,? பாக்கெட் நிரப்பும் போலீஸ்! சட்டவிரோத 'பார்'களாக மாறிய ஓட்டல்கள்; கோவையில் களையெடுப்பாரா டி.ஜி.பி.,?
பாக்கெட் நிரப்பும் போலீஸ்! சட்டவிரோத 'பார்'களாக மாறிய ஓட்டல்கள்; கோவையில் களையெடுப்பாரா டி.ஜி.பி.,?
பாக்கெட் நிரப்பும் போலீஸ்! சட்டவிரோத 'பார்'களாக மாறிய ஓட்டல்கள்; கோவையில் களையெடுப்பாரா டி.ஜி.பி.,?
பாக்கெட் நிரப்பும் போலீஸ்! சட்டவிரோத 'பார்'களாக மாறிய ஓட்டல்கள்; கோவையில் களையெடுப்பாரா டி.ஜி.பி.,?

சட்டவிரோத மது 'பார்'கள்
கோவில்பாளையம், அன்னுார் போலீஸ் எல்லைக்குள் கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பாளையம், குரும்பபாளையம் - காளப்பட்டி சாலை உள்ளிட்ட இடங்களில் கோவில்பாளையத்தில் 9 சாலையோர தாபா ஓட்டல்கள்; குரும்பபாளையத்தில் 2 ; கருமத்தம்பட்டியில் அவிநாசி சாலையில் 11, சோமனூர் - அன்னூர் சாலையில் 6; சூலுாரில் திருச்சி சாலையில் 6, எல் அண்ட் டி பைபாஸ்சில் 4.அவிநாசி சாலையில் 6, பாப்பம்பட்டி சாலையில் 3, சுல்த்தான்பேட்டை பொள்ளாச்சி சாலையில் 3, செட்டிபாளையம் சாலையில் 2; பேரூரில் சிறுவாணி சாலையில் 2; காரமடை - அன்னூர் சாலையில் 2; மதுக்கரையில் எல் அண்ட் டி பைபாஸ் சாலை, கோவை புதுார் - வாளையார், வேலந்தாவளம், மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம் சாலைகளில் 13; ஆலாந்துறையில் சிறுவாணி மெயின் ரோடு, சித்திரைச்சாவடியில் 2 தாபா மற்றும் குடில் ஓட்டல்கள் இயங்குகின்றன.
கனிமவளம் கடத்தல்
மேட்டுப்பாளையம் சப் டிவிஷனில் பல இடங்களில், அனுமதியற்ற நேரங்களில் டாஸ்மாக் மது விற்பனை நடக்கிறது. '3 நம்பர்' லாட்டரி விற்பனை, சீட்டாட்டத்துக்கு பஞ்சமில்லை. டாஸ்மாக் பார்களில் இருந்து மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தலா ரூ.10ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை, மாமூல் செல்கிறது. கனிம வளம் கொண்டு செல்லப்படும் லாரிகளுக்கு, தலா ரூ.1000 வசூல் செய்யப்படுவதாக, டிரைவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடத்தலுக்கு ரூ.1000 மாமூல்
கேரள மாநில எல்லையையொட்டி, குவாரிகளில் இருந்து அதிகளவு கனிம வளம் கடத்த வாகனங்களிடம் தலா 1000 ரூபாய் வசூலிக்கின்றனர். நாளொன்றுக்கு 200 வாகனங்கள் கடத்தலில் ஈடுபடுகின்றன. கோமங்கலம், வடக்கிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்கள், தனித்தீவாக மாறிவிட்டன. மக்களின் பெரும்பாலான புகார்கள், கட்ட பஞ்சாயத்திலேயே முடிக்கப்படுகின்றன.