/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கணியூர் ஊராட்சி வனங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு கணியூர் ஊராட்சி வனங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
கணியூர் ஊராட்சி வனங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
கணியூர் ஊராட்சி வனங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
கணியூர் ஊராட்சி வனங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
ADDED : ஜூலை 25, 2024 10:53 PM

கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டி ஊராட்சி பகுதிகளில், இதுவரை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சியில், மாரி வனம், திருமால் வனம் உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றன. ஊராட்சி நிர்வாகம் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா, ஒளிர் முகப்பு துவக்க விழா நடந்தது. திருமால் வனத்தில் நடந்த நிகழ்ச்சியில், 10 ஆயிரமாவது மரக்கன்றை, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் நடவு செய்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜூ, ஊராட்சி தலைவர் வேலுசாமி, மற்றும் வி.ஆர்., பவுண்டரி நிர்வாகத்தினர், தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
தொடர்ந்து, ஊராட்சி அலுவலகத்தின் முன் 'நம்ம கணியூர்' ஒளிர் முகப்பு திறக்கப்பட்டது. துணைத்தலைவர் ராஜூ, வனத்துறை அலுவலர் பிரியதர்ஷினி, கோவை குளங்கள் அமைப்பு நிர்வாகி மணிகண்டன், ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.