/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிதாக எம்.எல்.ஏ., அலுவலகம் கட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை புதிதாக எம்.எல்.ஏ., அலுவலகம் கட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை
புதிதாக எம்.எல்.ஏ., அலுவலகம் கட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை
புதிதாக எம்.எல்.ஏ., அலுவலகம் கட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை
புதிதாக எம்.எல்.ஏ., அலுவலகம் கட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை
ADDED : ஜூலை 08, 2024 01:50 AM
வால்பாறை;வால்பாறை சட்டசபை மலைப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிய கடந்த, 18 ஆண்டுகளுக்கு முன்பு வளையல்கடை வீதி அருகே, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டது.
எம்.எல்.ஏ.,வாக இருந்த கோவைதங்கம், ஆறுமுகம் ஆகியோர், இந்த அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டறிந்தனர். அதன்பின் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ., கஸ்துாரிவாசுவும், சிட்டிங் எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமியும் ஒரு நாள் கூட அலுவலகம் திறந்து மக்கள் குறைகளை கேட்கவில்லை.
இதனிடையே வால்பாறை நகரில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகம், பழுதடைந்த நிலையில் உள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
வால்பாறை மக்கள் கூறுகையில், 'சிட்டிங் எம்.எல்.ஏ., வாடகை கட்டத்தில் அலுவலகம் திறந்து மக்கள் குறை கேட்டு வருகிறார். இருப்பினும் நகரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, அரசு நிதி ஒதுக்கி, புதிய எம்.எல்.ஏ., அலுவலகம் கட்ட வேண்டும்' என்றனர்.