/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தனியார் உதவியுடன் ரூ.82 லட்சத்தில் பூங்கா தனியார் உதவியுடன் ரூ.82 லட்சத்தில் பூங்கா
தனியார் உதவியுடன் ரூ.82 லட்சத்தில் பூங்கா
தனியார் உதவியுடன் ரூ.82 லட்சத்தில் பூங்கா
தனியார் உதவியுடன் ரூ.82 லட்சத்தில் பூங்கா
ADDED : ஜூலை 25, 2024 12:26 AM
கோவை : தனியார் பங்களிப்புடன் ரூ.82 லட்சம் மதிப்பில், அமைக்கப்பட்ட பூங்காவை, மாநகராட்சி கமிஷனர் திறந்து வைத்தார்.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பி.எம்.ஆர்., லே-அவுட்டில், தனியார் பங்களிப்புடன்(விஜயலட்சுமி - ராமகிருஷ்ணன் அறக்கட்டளை) ரூ.82 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சிறுவர் மற்றும் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டது.
பூங்காவில், விளையாட்டு உபகரணங்கள், சேலார் மின்விளக்குகள், குடிநீர் வசதி, ஓய்வு அறை, சொட்டுநீர் பாசன வசதி, நடைபாதை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பூங்காவை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் நேற்று, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என, அவர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் வெற்றிச்செல்வன், கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.