Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பைகள் கொட்ட இடமில்லாமல் ஊராட்சி நிர்வாகம் தவிர்ப்பு

குப்பைகள் கொட்ட இடமில்லாமல் ஊராட்சி நிர்வாகம் தவிர்ப்பு

குப்பைகள் கொட்ட இடமில்லாமல் ஊராட்சி நிர்வாகம் தவிர்ப்பு

குப்பைகள் கொட்ட இடமில்லாமல் ஊராட்சி நிர்வாகம் தவிர்ப்பு

ADDED : ஜூன் 30, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்:குப்பை கொட்ட இடமில்லாமல் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி ஒன்று. இந்த ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மிகவும் பெரிய ஊராட்சிகளில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியும் ஒன்றாகும். இந்த ஊராட்சி மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே அமைந்துள்ளதால், குடியிருப்புகளும், லே அவுட்டுகளும் அதிக அளவில் உள்ளன. ஊராட்சியில் வீடு வீடாக தூய்மை பணியாளர்கள், குப்பைகளை சேகரித்து, அதை தரம் பிரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்த போதும் கடை வியாபாரிகள், சில பொதுமக்கள் ஊராட்சி பகுதியில் உள்ள சாலையின் ஓரங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஊராட்சிக்கு என, குப்பை கொட்ட தனியாக இடம் இல்லாததால், இந்த குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்யாத நிலை ஏற்படுகிறது. இதனால் சாலையின் ஓரப்பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. மேலும் குப்பையில் இருந்து வரும் துர்நாற்றத்தால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இது குறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவர் விமலா கூறியதாவது:

மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே உள்ள, ஐந்து வார்டுகளில் தினமும் நான்கு டன் குப்பைகள் சேகரமாகின்றன. அதை மக்கும், மக்காத குப்பை என, இரண்டாக தரம் பிரிக்கப்படுகிறது. ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு என, தனியாக இடம் இல்லாததால், மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்ட அனுமதி வேண்டி, பலமுறை நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தோம்.

அதற்கு கமிஷனர், தரம் பிரித்த மக்கும் குப்பைகளை மட்டும் கொட்ட அனுமதித்துள்ளார். அதனால் தினமும் மக்கும் குப்பைகள் மட்டுமே, மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை தனியார் கம்பெனிக்கு வழங்கப்படுகிறது.

ஆனால் சாலையில் ஓரங்களில் பொதுமக்கள் கொட்டியுள்ள குப்பைகளை, கொட்டுவதற்கு ஊராட்சியில் இடவசதி இல்லாத நிலை உள்ளது. எனவே சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் உள்ள புறம்போக்கு இடங்களை, மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து, குப்பை கொட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஊராட்சித் தலைவர் கூறினார்.

_____

படங்கள் உண்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us