/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கனவு இல்லம் திட்ட பணிக்கு உத்தரவு கனவு இல்லம் திட்ட பணிக்கு உத்தரவு
கனவு இல்லம் திட்ட பணிக்கு உத்தரவு
கனவு இல்லம் திட்ட பணிக்கு உத்தரவு
கனவு இல்லம் திட்ட பணிக்கு உத்தரவு
ADDED : ஜூலை 13, 2024 08:41 AM

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு ஒன்றியத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் உள்ள பயனாளர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. இதில், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், விஜயகுமார், ஊராட்சி தலைவர்கள், செயல் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 104 பயனாளர்களுக்கான பணி உத்தரவை, அந்ததந்த ஊராட்சி தலைவர்களுடன் சேர்ந்து, எம்.பி., வழங்கினார். கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் தேர்வாகியுள்ள பயனாளர்கள் அனைவருக்கும், வீடு கட்ட 3.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி நல்ல முறையில் வீடு கட்ட வேண்டும். வீடு கட்டும் பணியை துவங்க வேண்டும், என, எம்.பி., தெரிவித்தார்.