ADDED : ஜூலை 25, 2024 11:12 PM

தொண்டாமுத்தூர் : கோவையில், கார்கில் போரின் 25 ஆம் ஆண்டு வெற்றியை கொண்டாடும் வகையில், முன்னாள் படை வீரர்களுக்கான ஆன்லைன் ரேடியோ இன்று துவங்கப்பட உள்ளது.
கோவையை சேர்ந்தவர் ஸ்ரீதர்,77. இவர், ஏராளமான ஆன்லைன் ரேடியோவை உருவாக்கி உள்ளார். இந்தியா--பாகிஸ்தான் இடையே, 1999ம் ஆண்டு நடந்த கார்கில் பேரில், ஜூலை, 26ம் தேதி, இந்தியா வெற்றி பெற்றது. இதனை, கொண்டாடும் வகையில், ஸ்ரீதர், முன்னாள் படை வீரர்களுக்கான பிரத்யேக ஆன்லைன் ரேடியோவை உருவாக்கியுள்ளார். இந்த, ரேடியோ, இன்று, முதல் துவங்குகிறது.