/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தக்காளியுடன் வெங்காயம் ஊடுபயிர் சாகுபடி தீவிரம் தக்காளியுடன் வெங்காயம் ஊடுபயிர் சாகுபடி தீவிரம்
தக்காளியுடன் வெங்காயம் ஊடுபயிர் சாகுபடி தீவிரம்
தக்காளியுடன் வெங்காயம் ஊடுபயிர் சாகுபடி தீவிரம்
தக்காளியுடன் வெங்காயம் ஊடுபயிர் சாகுபடி தீவிரம்
ADDED : ஜூலை 10, 2024 01:54 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் பகுதியில் உள்ள விவசாயிகள் தக்காளியுடன், ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர்.
கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் பகுதியில் உள்ள விவசாயிகள், தற்போது தக்காளி நாற்று நடவு செய்ய துவங்கியுள்ளனர். இந்த ஆண்டு போதிய மழை பொழிவு இல்லாததால் குறைந்த அளவு தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், சிலர் தக்காளிக்குள் ஊடுபயிராக சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
கோடையில் தண்ணீர் வறட்சி அதிகமாக இருந்தது. அதன்பின் மழையும் பெரிதாக இல்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள் குறைந்த அளவே தக்காளி பயிரிட்டுள்ளனர்.
மேலும், 15 முதல் 30 பெட்டி (13 கிலோ) அளவு தக்காளி கிடைக்கும் அளவுக்கு மட்டுமே பயிரிட்டுள்ளனர். இதில், ஊடுபயிராக சிலர் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.
தக்காளி மட்டும் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பப்படும். சின்ன வெங்காயத்தை சொந்த தேவைக்காக பயன்படுத்துவார்கள். மேலும், மழை குறைவான நேரத்தில் அதிகமாக பயிர் செய்வதை தவிர்த்து குறைவான அளவே தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.