ADDED : ஜூன் 11, 2024 11:11 PM
பெ.நா.பாளையம்:கோவை மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்.மில்ஸ் பிரிவு, ஆவாரம்பாளையம் ஆகிய பகுதிகளில் 'ஸ்பா' சென்டரை ஷோபனா மேரி,28, நடத்தி வந்தார்.
இவரிடம் தனக்கு அதிகாரிகள் பலர் பழக்கம் உண்டு எனக் கூறி, மோசடியாக மாதந்தோறும், 4 லட்சம் ரூபாயை கணபதியைச் சேர்ந்த சுரேஷ், 38, பெற்று வந்தார்.
இந்நிலையில், ஷோபனா மேரியின் தோழி கரூர் ரேவதியின் மகனை தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்க்க, சுரேஷ், 5 லட்சம் ரூபாய் மோசடியாக பெற்றார். ஆனால் கல்லூரியில் சேர்க்கவில்லை.
இது தொடர்பாக ஷோபனா மேரி கேட்டதற்கு சுரேஷ் மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஷோபனா மேரி துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோதி, எஸ்.ஐ., மோகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, சுரேைஷ கைது செய்தனர்.