/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஓட்டு எண்ணிக்கையில் அதிகாரிகள் மெத்தனம்ஓட்டு எண்ணிக்கையில் அதிகாரிகள் மெத்தனம்
ஓட்டு எண்ணிக்கையில் அதிகாரிகள் மெத்தனம்
ஓட்டு எண்ணிக்கையில் அதிகாரிகள் மெத்தனம்
ஓட்டு எண்ணிக்கையில் அதிகாரிகள் மெத்தனம்
ADDED : ஜூன் 05, 2024 01:22 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை நேற்று காலையில் துவங்கியது. அலுவலர்கள் டேபிள் வாரியாக எண்ணிய ஓட்டுக்களை, உடனடியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவர்கள் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுத்தினர். எண்ணிக்கை வேகமாக நடந்தாலும், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, முடிவுகள் அறிவிப்பதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. அதேபோன்று, பொள்ளாச்சி தொகுதியின் தேர்தல் முடிவுகளை, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.