/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் ஆலோசனை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் ஆலோசனை
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் ஆலோசனை
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் ஆலோசனை
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் ஆலோசனை
ADDED : ஜூன் 16, 2024 11:23 PM

சூலுார்;கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், ஜூலை 5ம்தேதி கருமத்தம்பட்டியில் மாநாடு நடத்த கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் சண்முகம் தலைமையில் மாதப்பூரில் நடந்தது. குக்கிராமங்களில் சங்கத்தை வலுப்படுத்துவது, இளைய தலைமுறையினரிடத்தில் விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவாக ஜூலை 5ம் தேதி சாமளாபுரத்தில் இருந்து கிட்டாம்பாளையம் வரை வாகன பேரணி நடத்துவது, அங்குள்ள மண்டபத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.
மாநில தலைவர் கூறுகையில், கள் இறக்க அனுமதிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடத்த உள்ளோம், என்றனர்.