/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இனி ஆட்சி செய்யும் ட்ரோன்; சாட்சி சொல்கிறார் ஸ்ரேயவர்தினி இனி ஆட்சி செய்யும் ட்ரோன்; சாட்சி சொல்கிறார் ஸ்ரேயவர்தினி
இனி ஆட்சி செய்யும் ட்ரோன்; சாட்சி சொல்கிறார் ஸ்ரேயவர்தினி
இனி ஆட்சி செய்யும் ட்ரோன்; சாட்சி சொல்கிறார் ஸ்ரேயவர்தினி
இனி ஆட்சி செய்யும் ட்ரோன்; சாட்சி சொல்கிறார் ஸ்ரேயவர்தினி
ADDED : ஜூலை 20, 2024 11:34 PM

தொழில்நுட்பம் இன்று வித்தை காட்டுகிறது. குறிப்பாக, வேளாண் துறையில் பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுவதை, கோவை கொடிசியாவில் நடந்த அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் அறிய முடிந்தது.
குறிப்பாக, விவசாயத்துக்கு பூச்சி மருந்து தெளிக்க பயன்படுத்தப்படும், ட்ரோன் வியக்க வைக்கிறது.
விவசாயிகளின் கூட்டத்துக்கு நடுவே, இதுகுறித்து அழகாக விளக்கிக் கொண்டிருந்தார் கோவையின் முதல் பெண் டிரோன் பைலட் ஸ்ரேயவர்தினி.
'பரவாயில்லையேம்மா... நல்லா விளக்கம் கொடுத்தீங்க' என்று, விவசாயிகள் பலரின் சர்ட்டிபிகேட், அவரை இன்னும் உற்சாகமாக்கியது.
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் இவர். இவருடைய தாயார், கோவையில் ஆசிரியராக பணிபுரிந்த நிலையில், மத்திய பிரேதசத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. தாயுடன் இவரும் சென்று விட்டார்.
7ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அங்கே தான் பள்ளி வாழ்க்கை. பின், கோவைக்கு வந்து கல்லுாரி படிப்பு முடித்தார். ஏரோநாட்டிக்கல் படிக்க வேண்டும் என்பது இவருடைய ஆசைு. அப்போதுதான், துடியலுாரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில், 6 மாத கால ட்ரோன் படிப்பு குறித்த தகவல் தெரியவந்தது.
அங்கே இணைந்து, ஆரம்ப கட்ட பயிற்சிகளை பெற்றார். பின், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள, 'சென்டர் ஆப் ஏரோஸ்பேஸ் ரிசர்ச்' என்ற இன்ஸ்டிடியூட்டில், சிறியது முதல் பெரியது வரை இருக்கும், ட்ரோன் செயல்பாடு குறித்து 10 நாள் பயிற்சி முடித்தார்.
முழுவதுமாக கற்று அதற்கான தகுதிச் சான்றிதழும் பெற்று, தற்போது சென்னையில் உள்ள ட்ரோன் தொடர்பாகன தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
''அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில், நிறைய பேர், ட்ரோன் பயன்பாடு குறித்து அறிந்துக் கொண்டனர். அவர்களுக்கு புரியும் விதமாக விளக்கினேன். பலர் கேட்டு ஆச்சரியப்பட்டனர்.
டில்லியில் உள்ள 'Directorate General of Civil Aviation'ல் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றதால், Drone Instructor அங்கீகாரம் கிடைத்துள்ளது. இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது,'' என்கிறார் ஸ்ரேயவர்தினி.
இன்னும் கற்க நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்து விட்டாலே, பெரிய ஆளாகி விடலாம். வாழ்த்துக்கள் பைலட்!